எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, June 29, 2010

என் புறநானுற்றுத் தாய் மீண்டும் பிறப்பெடுக்கிறாள்



பச்சைக்கறி தின்ற
எச்சில் கை காயாமல்
வரம் தந்த
அரசனுக்கு கைகுலுக்க
எங்கள் கரை வந்த
காட்டேறி.

முதலை குழுமத்தின்
முதன்மை உறுப்பினர்
கண்ணீரோடு கரையேறி
அசுரமடியில் அமர்ந்திருந்த
காட்டேறியின் காலிடுக்கில் நின்று
நரமாமிசம் தின்பதை
நிறுத்திவிடன்றேது.

காட்டேறியின்
"இனி நான் பல்குத்தப் போவதில்லை"
என்ற உறுதிமொழியை-தன்
வெற்றிச் சிகரமாக்கி-பிரிதொருநாளில்
கிழ முதலைக்கு கிரிடம்
சூட்டப்பட்டது.

அதோ என்
முலையறுந்த தங்கையொருத்தி
கந்தகம் நிரப்பப்பட்ட
யோனிக் குழிகளுடன்
வருகிறாள்.

முதலைக் கூடாரமாகட்டும்
அசுரர்களாகட்டும்,காட்டேரிகளாகட்டும்
இனி யம்மை யார்
புணர்ந்தாலும் சிதறடிப்போம்
மறுபுணர்தல் இன்றியேன்று.

என் புறநானுற்றுத் தாய்
மீண்டும் பிறப்பெடுக்கிறாள்
கோடானகோடியாய்.

Thursday, June 24, 2010

தீயா


என் விழிப்
பாவைக்குள்
நிறைந்த
பாவையவள்-நட்புக்
"கோ" வையவள்.

புரிதல் இல்லாப்
பேதையவள்.

பிறழ் மனம்கொண்ட
பெதும்பையவள்.

அன்பிலாய்
கோபத்தில் ஆந்தையாய்
எரிக்கும் அக்னியாய்.

அன்னையாய்
அனைத்தவள்.
அணையாய்
தடுத்தவள்.

மைகாய்ந்த
என் எழுதுகோலில்
அன்பு நிரப்பி எனக்கு
எழுதக் கொடுத்தவள்-என்
கை பிடித்து மீட்டு
கவிதை தேசத்திற்கு
மிண்டும்
அழைத்துவந்தவள்.

மெய்யானவள்
என்னில்
மெய் ஆனவள்.

வீதிகள்
புதைந்தஎன்
தேசத்தின் விடியலுக்காய்
விளக்கு கொடுத்தவள்.

செய்யாத
தவறுக்காய்எனக்கு
விலக்கு கொடுத்தவள்.

என்னிடத்தில்
உள்ள உனக்கான
பாத்திரமும்.

நமக்குள்
நீ ஏற்படுத்திய
இட்டுநிரப்பமுடியாத
இடைவெளியும்
வெற்றிடமாகவே
காத்திருக்கும்.

கழிவறைத் தாய்கள்


துளைமாற்றி
பிதுக்கி எறியப்படும்
மலமாய் சிசு.

உபயோகம்
முடிந்து உருவிஎறியப்படும்
ஆணுறையாய் தாய்மை.

கழிவறைகளில்
வழித்தேறியப்படும்
மாதவிடாய் கழிவுகளாய்
மனிதநேய மாண்புகள்.

புதுமை
புரட்சி
பெண்ணியம்
தேசியம்
புண்ணாக்கு.

பாரதி
மீண்டெழுந்து வந்து
இப் புண் ஆற்று.

Thursday, March 18, 2010

பேறு


உறவில்லாத
தனிமை.

உன்னிடத்தில்
மறுக்கபட்ட-எனது
உரிமை.

சாவிற்கு
பின் வரும்
அமைதி.

இறந்து
பிரசுவித்த
சிசு.

சுடுகாட்டு
சாம்பல்.

சித்திரைச்
சூரியன்.

நித்திரை
பொசுக்கும்
நிலா.

அடியில்லாத
செருப்பு.

விடிவில்லாத
இரவு.

உதடு
வெடித்த
புன்செய்.

குருதி
வழிந்த
புத்தன் சிலை.

முள்ளோடிந்த
கடிகாரம்.

முடிவில்லாத
வாழ்க்கை.

எனக்கு கிடைத்தவைகள்.

Friday, March 12, 2010

ஓர் ஈழத் தாயின் வழியனுப்பல்


கலைந்திடு
என் குழந்தாய்
கருவில் இருந்து
கலைந்திடு என்
குழந்தாய்.

வன்னியில்
சிங்களவனால்
புனரப்பட்ட உன்
பெரியக்காள்
சொல்லிவிட்டாள்
"இனியொரு பெண்
பிறந்தால் அது
ஈழத்திலே
இருக்க வேண்டுமென்றே"
அன்றே.

உன்
பாலினம் நானறியேன்
ஆயினும்-நீ
கலைந்திடு செல்லமே.

பெண்ணாய்
நீ பிறந்தால்
கலவரத்தில் புணரப்படுவாய்.
ஆணாய்
பிறந்துவிட்டால்
புலியா என்று சோதிக்க
நிர்வாண
உடை அணிவாய்.

கம்பிகளுக்குள்
அடைபட்டே
காலம் கழியனுமா?
வேண்டாமேன்
தங்கமே-கலைந்திடு
நீயேன்
கருவிலே.

நமது
ஈனம் அழித்திட
தலைவனிருந்தான்.
அவன்
ஈழத்தாகம்
அழித்திட
கொத்தளமிட்டார்.

தமிழச்சிகள்
மானம் காற்றில்
பறக்க-உயிரில்லா
கண்ணகி சிலை
காட்டி தேர்தல்
முழக்கமிட்டார்.

ஷெல் அடித்து
ஷெல் அடித்தே
நம் இனம்
செல்லரித்துப்
போனதடா.

ஈழம் கிடைப்பது
பிறகேனினும்-நம்
ஈனம் துடைத்திட
யாருமில்லை
இப்போது-ஆதலால்
கலைந்திடேன்
கருவிலே-என்
முகமறியா
ஆம்பலே.

சுரக்குமென்
தாய்பாலை-என்
இறப்புக்குப் பிறகு
உனக்களிப்பேன்-அதுவரை
நீயேன்
கருவிலிருந்து
அழிந்துப்
பொறுத்திருப்பாய்.

போ என் தங்கமே.
நானும் வருவேன் பின்னமே.

Thursday, March 11, 2010

நான் கள்ளிகளின் காதலன்


நான்
கடந்து செல்லும்
பாதைகளில்
கற்பூர முல்லைகளே
இருந்தாலும்
கள்ளிகளுக்காய்
மட்டுமே அனுமாநிக்கப்பட்டவன்
நான்.

எனக்காக
எப்போதோ
எங்கேயோ
ஏதோ
ஓர் தேவதை
வீசி எறிந்த
மலர் கூட
எனை வந்து
தொடுகையில்
சருகாகவே எனை
ஸ்பரிசித்தது.

அப்போதுதான்
உணர்ந்தேன்
நான்
"கள்ளிகளின் காதலன்"
என்று."

உறுதியேற்போம்


பேதமெல்லாம்
கடந்து
நண்பராய்
இணைவோம்-நாம்
மனிதநேயமுள்ள
மாந்தராய்
மலர்வோம்.

சாதி மதம்
அடித்து நொறுக்க
சாட்டை சுழற்றுவோம்
வர்க்க பேதம்
மண்ணில் புதைக்க
கொடு வாளேந்துவோம்
சமதர்ம
சமத்துவம் செய்திட
புதுத் தளம்
செய்துவோம்-நாம்
களம் காணுவோம்

நாகரிக
வார்த்தைகளால்-சமூகக்
கோபம் பதிவு செய்.

உன்
அழகு தமிழ்
கவிதைகளால்-அரங்கம்
அழகு செய்.

சுவை
மிகு நகைத்
திறனை-சுவைக்க
மற்றவர்க்குக்
கொடு.

பார்
மாந்தர்
மடமை நீக்க
பகுத்தறிவுப்
பாதை எடு.
நீ
மடமைக்கோர்
பாடை எடு.

பொதுவுடைமை
சமதர்மம்
இதுவே நம்
பாதையாகும்
அதை
அமைப்பதற்கும்.
அதற்காய்
உழைப்பதற்கும்
இதுவே காலமாகும்.

Monday, March 8, 2010

பதில்


முல்லை
அவள்-எம்
இதயத்தில்
தைத்த
முள்ளை-இதுவரைக்கும்
நான்
அகற்ற
எத்தனிக்கவே
இல்லை.

விலக்க
என்
முளை
முயற்சிக்கவும்
இல்லை-அவள்
எனை விட்டு
பிரிகையில்
சொன்ன
சொல்லை.

இரவலாகவாவது
கொடு உன்
இதயத்தை
என்று நான்
யாசித்தபோது
அவளது பதில்
இதுவரைக்கும்.
"இல்லை".

Sunday, March 7, 2010

இதுபோதும் எனக்கு.


என்
தோள் சரிந்தநிலையில்
நீ.

கழுத்திறுக்க
கொடுத்த
முத்தம்.

தெளிக்கும்
பச்சையில்
வெளி நிறைந்த
புல்.

கையில்
குறையாத
மதுக்கின்னம்.

மதுக்குடுவை
நீ.
மதுவாய்
காதல்.
அதில் கரையும்
பனிக் கடிகளாய்
நான்.
வழிய வழியக்
அன்பு.

இதுபோதும்
உயிர்பிரிய
எனக்கு.

Friday, March 5, 2010

பிரிவாற்றாமை


நீ
பிஞ்சு மொழி
மஞ்சள்
கிள்ளை.

சிறகுகளை
சிதறவிட்ட
சுடிதார்
தேவதை.

ஊடல்.
கூடல்
கூட்டும்.

சிரபுஞ்சியில்
நின்று கொண்டே
சகாரா
உஷ்ணம்
உணர்த்தும் உன்
பிரிவாற்றாமை.

நகம் வெட்ட
மட்டுமே
கத்தியெடுக்கும் நான்
இப்போதேல்லாம்
நெஞ்சு கிழித்து
காட்டலாமா உன்னிடம்
என்றோசிக்கும்
அனுமனாகிவிட்டேன்.

நீ
பேசாத நாட்களில்
காற்று குடிக்கும்
தாவரமாகிப்
போனேன் நான்.

பிற
உயிரினங்கள்
சுவாசிப்பிற்க்காய்
ஆக்சிஜன்
மிச்சம் வைக்கச்சொல்லி
அழுகின்றன
என்னிடம்.

கேட்கவில்லையா
உனக்கு?

கூவி விடு
குயிலே-என்
அழைபேசி-உன்
அழைப்பிற்காய்
ஏங்கி நிற்கிறது.

Thursday, March 4, 2010

நான் அன்பு தொலைத்தவன்


மணிக்கணக்கில்
நான் பேசிய
வார்த்தைகளை
மவுனத்தில்
கரைத்திட்ட
கணப் பொழுதுகள்.

மேடு பள்ளங்களை
எதிர்பார்த்த-உன்
இதழால் மட்டுமே
நிரப்ப முடிந்த

பள்ளங்கள் ஏற்படுத்திய
உன்
இருசக்கர வாகனப்
பயண உரசல்.

உன் இதழ்
வெப்பம்
கைப் பேசியின்
வழியே என்
செவி உணர்ந்த
மணிப் பொழுதுகள்.

இருவருமே
கல்லூரி தவிர்த்து
காதல் பழகிய
அந்த நாட்கள்.

அந்த
ஒரு இரவில்
நம் அன்பின்
தேடலுக்கு பின்
என் வேற்று மார்பில்
கலைந்த
கூந்தலோடு-உன்
இதழ் தொடுத்த
கோலத்தில் வழிந்த
எச்சில்
பிசுபிசுப்பு.

தூக்கமில்லாத
கண்களோடு
அடுத்த நாள்
கல்லூரியின்
உணவு இடைவேளையில்
அன்போழுகிய அந்த
அசதிப் புன்னகை.

ஏதோ
ஒரு மாலைப்பொழுதில்
உன் தகப்பனோடு
என் வீட்டு
வரவேற்ப்பறையில்-நீ
கொடுத்த
என் தந்தையின்
வருகையை எதிர்பார்க்கும்
உன் திருமண அழைப்பிதல்.

புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்(கட்டுரை)


சுவாமி என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகளை தமிழக அரசின் ஆதரவுத் தொலைகாட்சி ஒவ்வொரு தமிழனின் வீட்டு கூடத்திலும் ஒளிபரப்புசெய்து மீண்டும் ஒரு முறை தனது ஏற்றப்புள்ளிகளை உயர்த்த முயற்சி செய்துள்ளது. 33 வயதே நிரம்பிய ஓர் இளைஞனை இதுவரை கடவுளின் கேட் பாசுடன் வந்த ஓர் தூதுவனாக நினைத்த இந்து மக்கள் கட்சி போன்ற காவிவேடதாரிகள் தற்போது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நித்யானந்தாவின் சொத்துக்களை நாசப்படுத முயற்சித்திருக்கிறார்கள். ஒருவேளை அந்த காவிவேடதாரிகளுக்கு நடிகையை நித்யானந்தா தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருந்தால் இந்த கலயோபரங்கள் நடந்திருக்காது. முதலில் சாமியார்களை ஒழுக்க சீலர்கள் என்று கருதுவதும்,ஒரு மானிடன் தனது எல்லாஉணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்ற அவனது சுயம் சார்ந்த முடிவினை ஒருசமுகம் முடிவெடுப்பது சரியா என்பது முதல் கேள்வி. எந்த ஒரு சாமியாருக்கும்,பாதிரியார்க்கும்,ஊலாமாக்களுக்கும்,கன்னிகாஸ்திரிகளுக்கும் விந்தணு வெளிப்பாடோ,மாதவிடாய் காலங்களோ எர்ப்படாமலிருக்கும் என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒரு ஆண் தனது கலவிப் பொழுதுகளில் விந்து வெளிப்பாட்டின் போது உச்சம் அடைகிறான் என்பது நிதர்சனம்.அதே நிதர்சனம் ஒரு சாமியாருக்கும் குறைந்த கால இடைவேளிகலான சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒருமுறையாவது நிகழ்வது இயல்பு.அப்படி இருக்க அவரை ப்ரம்ச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துவது தவறு.அது அவரின் சுய சிந்தனைக்கு உட்பட்ட முடிவு. மேலும் அந்த நடிகையின் முழு சம்மததினுடனே அவர் உறவு கொள்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.ஒரு பெண் அவளது விருப்பமான ஆணின் அவனது சம்மதம் இருக்கும் பட்சத்தில் அவனுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.இப்போது வீதிக்கு வந்து போராடும் பண்பாடு காப்பாளர்கள் அந்த நடிகை நடித்த குளியல் காட்சிகளையோ, குத்து பாட்டுக்களையோ பார்த்திருக்க மாட்டார்கள் என அந்த இயக்கம் சார்ந்த தலைவர்கள் விளக்கம் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். மேலும் பெரும்பான்மை மக்கள் மதிக்கும் இடங்களான இதற்க்கு முன்னாள் நிகழ்ந்த கருவறை கலவி போன்று கருவறை தளங்களை பயன்படுத்தாமல் தனியறையில் உறவுகொண்டமைக்காக நித்யானந்தா பாராட்டப்பட வேண்டியவராகிறார். இதில் தவறு நமது சமூகத்தையே சார்ந்தது,கடவுளின் பிரதிநிதி என்று நம்மில் இருந்தே ஒருவன் கூறும்போது அதனைஏற்று அவனை வழிபடத் தொடங்கியபிறகு,சக மனிதர்களுக்கு தோன்றும் உணர்சிகளை அவன் வெளிக் கொணரும்போது சமுக மனிதர்களின் மனம் அதனை ஏற்க மறுக்கிறது, இதில் கண்டிக்கப்படவேண்டியவர்கள் ஊடகத்தார். எத்தனையோ சமுகம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க சாமியார் அவரது அறையில் பஜனை செய்கிறாரா அல்லது மாத்திரை விழுங்கி காலித்தனம் செய்கிறாரா என வேவு பார்க்கும் திறமையை பிறசமுகம் சார்ந்த நிகழ்வுகளில் காட்டலாம். நமது மக்களுக்கு கடவுள் உண்டா,அவ்வாறு இருந்தால் அந்த நபருக்கு ஏஜெண்டுகள் உண்ட என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த நிகழ்வு நமக்கெல்லாம் எடுத்து இயம்புகிறதே ஒழிய வேறு எந்த ஒரு பேரழிவும் இந்த நிகழ்வால் ஏற்படப்போவதில்லை. பெரியார்,மார்க்ஸ்போன்ற தலைவர்கள் சொன்ன கருத்துக்களை மக்களிடம் சொல்லி புரிதலை ஏற்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்ததர்க்க்காகவும் நித்யனந்தாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிரிக்கிறோம்.இது புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்.

அரிவாள்-சுத்தியல்

Tuesday, March 2, 2010

மறுவாழ்வு


விழிக் குளம்
தளும்ப
விதி நொந்த
நங்கள் - பணமுடி
கொடுத்த - படகு
பாதியில்
இறக்கி விட
கடற்படை கைது செய்து
கரைசேர்ந்தபோது
கையிருப்பு சில்லறைகளையும்
அலுவலர் கூட்டம்
பறித்து கொண்டு - எமை
முகாம் நோக்கி
இட்டு சென்றபோது -எம்மை
கடந்துசென்றது
ஈழத் தமிழர் மறுவாழ்வு பேரணி ???

நிழல் கூடு


மனிகொருமுறை கூடும்
கடிகரமுல்லாய்-நாணம்!
நொடிக்கொருமுறை அணைத்தேன்
உன்னை என் நினைவால்!

கனிசுவை மலர்
உந்தன் இதழ் - அதில்படர்
பனி ஈரம்
எந்தன் மனம்!

நாணல் இமையை
கண்ட நாளாய் - என் மணம்
காணல் நீரை
கக்குதடி விரசத்தால்!

இதழோடு
இதழ் சேர்த்து
உயிர்
பிரிக்ககற்றுக்கொடு!

உன்
உயிரோடு
எனைக்கோர்த்து
உறவாட
சொல்லிகொடு-இல்லையேல்
உன் நிழலோடு
எனைப் புதைத்து
உறங்கச் சொல்லி
ஆணை இடு!

தீவிரவாதம்


தகர்கத்தான்
செல்கிறோம்
நாங்கள்.
சிங்களப் பேரினவாதத்தை.

என்னுடன்
சேர்ந்து
என் கற்பழிக்கப்பட்ட
தங்கையின்
காதலனும் வருகிறான்.

விடை தேடி


எங்கோ
விழுந்த மழைத்துளி
என் உயிர்
நனைத்தது
ஏன்?

எங்கோ
உறைந்த
பனிக்கட்டியால்
என்இதயம்
உறைந்தது ஏன்?

நீல வானிலிருந்து
சிந்தும்
நீர் துளிகள்
சேமித்து-மீண்டும்
வானுக்கே வழியனுப்ப
முயற்சிக்கேறேன்!

உலகம்
என்னை
மட்டும்
வேறுபடுத்திப்
பார்க்கிறதா-இல்லை
நான் வேறுபடிருக்கேறேனா?

இது
உன் விழியால்
வந்த வினை-உன்
விழிகளில்
மட்டுமே
விடையும்!

அரிவாள்-சுத்தியல்

எழுவாய் தமிழா.........


தமிழே
உயிர்(ரே)-அதன்
பகையே-நீ
பனியாய்
மறைவாய்
உடனே.

மறையாப்
பகையை
அறுப்போம்
உடனே அடியோட(டு)
அறவே!

தமிழா
உடனே
வருவாய்
கையில்
கொலைவாளுடனே!

சிரமாய்;
கருவாய்;
கற்பாய்-காப்போம்
உயர் மேவிய
தமிழை!
அரிவாள்-சுத்தியல்

காதலே எழுந்துவா கல்லறை வாசம் போதும்


ஏனடி
இதழ்களுக்கிடையே
சுவர் எழுப்புகிறாய்?

இன்னுமொரு
உத்தபுரம்
தேவையா?

செம்படை
வரும்முன்
சுவர் நீக்கு.

வா
ஓர்எச்சில்
இலக்கியம்
எழுதுவோம்
நாம்!


உச்சத்திலும் ஏனடி
மிச்சம்
வைக்கிறாய்?

முன்னொருமுறை
இருள்
கவிழ்ந்த
கலவிப்
பொழுதுகளில் நீ
வரைந்த நகக்கிறல்
ஓவியம்
தழும்புகளாய்.

அதனைப்புதுப்பிக்கப்
புதுப் பட்டறை
அமைப்போம்
சட்டென வா!


அரிவாள்-சுத்தியல்

Sunday, February 28, 2010

சாதிகள் இல்லையா அடிப் பாப்பா?





ஓர் வகுப்பறையின் தமிழ் வகுப்பின் போது

"சாதிகள் இல்லையடிப் பாப்பா
குலத் தாழ்ச்சிகள் உயர்ச்சி........."


அப்போது வகுப்பறையின் ஒலிபெருக்கியில்

"சுற்றறிக்கை என் 22ன் படி மாணவர்கள் தங்களது உணவு
இடைவேளையின்போது தலைமை ஆசிரியர் அறையில் தங்களது
பெயர் மற்றும் தந்தை பெயரை சரிபார்த்து சாதிச் சான்றிதழைப்
பெற்றுக் கொள்ளலாம்" மீண்டும் தொடர்கிறது


"நீதி உயர்ந்த மதிக் கல்வி........."

அரிவாள்-சுத்தியல்

Thursday, February 25, 2010

என் பாகைமானி............


இயற்பியல் ஆய்வுகூடம் செல்ல
மணியடித்த பின்னர்
மாணவர்களோடு சென்றநான் பாகைமானியை
மறந்தது நினைவுக்குவர
எடுத்துவர திரும்பிசென்று தனிஒருவனாய்
ஆய்வுக் கூட மாடியில்
காலடிவைத்து நிமிர்ந்த போது
உன் தோழி துணையோடு நீ
வருவதைப் பார்த்து அதிர்ந்தது-என்
இதயம்!

எனை நீ பார்த்ததின்
எதிரொலியோ தெரியவில்லை அதுவரை
நீ சிரித்த சிரிப்பொலிகள்
மணலில் விழுந்த சில்லரைகளாய்
சலனமற்றே சரிந்தது!

நூல் அவிழும் ஓசைகூட
நூறு மைல்களுக்கு கேட்கும்
அந்த நிசப்தத்தில் கேலி
சிரிப்பை அடக்க முயற்சிக்கும் உன்
தோழியின் கைகளை கிள்ளத்
தவறவில்லை நீ.

இதுவே தொடரவேண்டுமென்று
காலத்தின் கடிகார முட்களை
நிறுத்த முயற்சித்து என்
இதயம் தோற்றுப்போனது என்னவோ
உண்மைதான்!

இருவருமே முகம் பார்க்க முடியாமல்
நான் உன் கொலுசின் வெள்ளி
முத்துக்களை எண்ணியதும்!
நீ என் கடிகார நொடிமுட்களையே
பார்த்ததையும் கவனிக்கத்
தவறிவிட்டேன்!

படிகள் குறையக் குறைய-குருதி
அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது என்
இதயத்தினுள்.

நீ கடந்து சென்ற ஒரு நொடியில்
உன் ஸ்பரிச நாற்றம் முகர்ந்ததோடு
உன் முகம் பார்க்க முடியாமல் உன்
ஒற்றை சடையின் ஊதா ரிப்பன் மட்டுமே
கண்ணில் பட்டது.

மேலேறித் திரும்பிப் பார்த்தபோது
கைவிரல் பட்ட தொட்டால்சினுங்கியைப் போல்
மறுகணம் உன் முகம்
மருவி சுவர் நோக்கியதை ஏனோ
என் மணம் ஏற்கமறுத்தது.

நீ என்னைக்
கடந்து சென்ற ஓர்
நொடிக்காக முத்தம்
தருகிறேன்-என்
பாகைமானிக்கு!

அரிவாள்-சுத்தியல்

என் செண்பகப் பூ


மஞ்சள் நதி
மல்லிகையே!

கற்ற என் மொழிகளெல்லாம்
உனைப் பாடியே
வற்றியதால்-என்
வெக்கையை தணித்திடவே
கவரியாய் நின் ஈரக்கூந்தல்
அனுப்பிடுவாய்!

மொட்டுகள் மலரத் துடிக்கும்
அதிகாலை வேளையில்
சிட்டு நீ வாசலிலமர்ந்து
கோலமிடும் அழகை
எட்டி நின்று பார்பதற்கு
எத்துனை ஜென்மம் வேண்டும்?

ஓரப் பார்வையிலே
உயிர் குடிக்கும் பெண்ணே-உந்தன்
துர நிழல் கண்டாலே
என் இதயம் தரையில் விழும்!

ஒற்றை முடிகோரும்
ஓரிரண்டு விரல்களையே-நானும்
பாடி நாவறண்டுப் போனதினால்
சற்றே திரும்பி நியும்
சல்லடை பார்வை வீசு-என்
சாவும் மோட்சமாகும்!

உன்
வெண்ணிலவு முகத்தில்
ஈரக்கைகளோடு இரவு
தெளித்த முத்துக்களா உன்
முகப்பருக்கள்?

உன்
காதோரப் பல்லக்குகளில்
இடமிருந்தால் என்னை
ஏற்றிக்கொள்.

உன் கன்னங்களோடு
உரசுவதேன்றால் திராவகம்
விழுங்கவும் தயாராய் இருக்கிறேன்!

காலைக் குளியல் முடித்து-நீ
தலை துவட்டும் போதேல்லாம்-என்
இதய வீதிகளெங்கும்
இனிமையான சாரல் காற்று!

கள்ளிகள் மட்டுமே தரிக்கும் -என்
கர்ப்பப்பையில்-நீ
இன்று செண்பகப் பூவாய்!

பன்னீர் வேண்டாம்
கண்ணீர் தெளி!
சந்தணம் வேண்டாம்
சாம்பலாவது துவு!

இப் பாலைவனம்
ஈரம் படர காத்திருக்கும்.

அரிவாள்-சுத்தியல்

Wednesday, February 24, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவின் போது எழுதப்பட்ட கவிதை




விதைகள்
புதைவது இழப்பென்றால்
விழுதுகளுகிங்கே
வழியேது?

விதைகள்
புதைவதும் உளிகள்
சிதைவதும்
இழப்பில்லை!

உன் விழியின்கனவினை
உன் வழியில் அடைவோம்
அதில் வியப்பில்லை!

இன உரிமை
மீள் போரில்
உயிர் நீத்த உன்
புகளுக்கிங்கே
மறிப்பில்லை !

அவ் வெறியர்தம்
தலை கொய்யும் - நாள்
தொலைவில்லை!

மறுபடியும் உன்
புன்சிரிப்பு
இவ்வுலகிற்கு கிட்டாதோ?

காலத்தின்
நொடி முள்
பின்னோக்கி
சுற்றாதோ?

அரிவாள்-சுத்தியல்

என்னவள்



பிரம்மன் சிலை
நீ - காமன்
கலை!

அன்பே எனை -உன்
அன்பால்
நனை!

இனியும்
ஏவாதே விழியால்
கணை!


இனி என் இதயம்மட்டுமே
உனக்கு நிரந்தர
மனை!

உன்
தனங்கள்
நிலவாய்மிளிரும் - நீ
நடக்கையில் பதறும்
முகம் கண்டு- என் மதி
சிதறும்!

இடையும்
இனி எடை
தாங்குமோ ?

இடைக்கு நான்
துணை
செய்யவோ?

உடைக்கு
இனி கொடு
விடுப்பு!

உன்
அதரம் எனக்கு
ஆகாரம் - இனி
பொழுதுகளுக்கு
இல்லை
சேதாரம் !!

அரிவாள்-சுத்தியல்

எனக்கும் கொஞ்சம் சொல்லிதாயேன்!!



எக்கணம்
தருவியோ
முத்தம்!
அக்கணம்
வந்திடுமா
நித்தம்!
யத்தனிக்க இயலும்முன்
முத்தமழை எனக்களித்து- அதனை
ஒளிந்து பார்த்த ஞாயிறை- உன்
ஒற்றை சடையில்
மறைத்து அந்நக்கீரன் கூற்றுப் பொய்க்கும்
உன் மயிர் மணத்தில்- முர்சையான
பகலவனை வெட்டி
உந்தன் குட்டி நகத்தில்
ஒளித்து வைக்கும் மனழுவு வித்தை
எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாயேன்!
அரிவாள்-சுத்தியல்

ஓ பண்பாடு காப்பர்களே!!




ஓ பண்பாடு காப்பர்களே!!
பாப்பாபட்டியிலும்,கிரிப்பட்டியிலும்
உங்கள் பண்பாடு பாடையில்
இருப்பதை என் மறந்து போனிர்கள்?

மாறுபட்ட கருத்தினை
பெண்ணொருத்தி கூறினாள் என்பதினால்
பெண்ணினத்தை கேவலப்படுத்தினாள் என்று
கூறும் உன் தமிழ்த் திருநாட்டில் வேசிகள் இல்லையா?

இதே கருத்தை வார்த்தைகளால்
மட்டுமே வேறுபடுத்திக் கூறிய பெரியாரை
திராவிடத் தலைவராக ஏற்றுக் கொண்டதேன்?

பெண்ணும் ஆணும் சேர்ந்துவாழ
திருமணமே தேவை இல்லை என்றுரைத்த
பெரியார் முட்டாளா?

வசைபாடும் தலைவர்களில்
வைப்பாட்டி வைத்துக் கொள்ளாதவர்கள்
எத்துனை பேர்?

உன் தமிழ் மொழியின்
சிலப்பாய் கூறப்படும்
காவியத்தில்
மாதவிக் கென்ன
மகாத்மா பாத்திரமா?

"ஆணுறை பயன்படுத்து" என்று
ஒரு பெண் கூறியது
ஒழுக்கக் கேடெனில்
இத்துணை ஆண்டு காலமாக
அரசு இயந்திரம் இதே விளம்பரத்திற்கு
பலகோடி செலவு செய்ததே;செய்கிறதே-அப்போதேல்லாம்
எங்கே போனது திராவிடனின் கலாச்சாரப் பற்று?
தமிழச்சிகளின் கற்புக் கவசம்?

சானியாமிர்சாவின் கால்சட்டையினாலும்
குஷ்புவின் வார்த்தையாலும்-உன்
வேலி தாண்டும் கலாச்சாரம் அழிகிரதேனில் அது
அழிவதில் தவறில்லை.

அரிவாள்-சுத்தியல்

சபிக்கப்பட்ட பார்வை




என்
ராஜவிதியின்
சாலையோர மலர்களின் முனைகளில்
இரத்தம் மட்டுமே வடிகிறது!

உனக்காக என்
இதயத்தில் அமைத்த
பூஞ்சோலையில் இன்று
பிணங்கள் எரிமுட்டப்படுகின்றன!

என் காதல் பறவை
எழும்பும் முன்னமே-அதன்
சிறகுகள் இடி விழுந்து
கருகிவிட்டன!

உனக்காக தூதனுப்பிய
தென்றல்
கடந்து சென்ற பாலைவனப் பிரதேசத்தில்
காணல் நீராய் மறைந்து விட்டது!

கடைசியாய் நீ
பிரிகையில் உயிர் வழியப்
பார்த்தப் பார்வை மட்டும்
ஈரம் மாறாமல்-என்
இதயத்தில்!
அரிவாள்-சுத்தியல்

கம்யுனிசம்(கதை)


மே தினக் கொண்டாட்டத்திற்கு எங்கள் ஊர் தயாராகிக் கொண்டிருந்தது,தெருவெங்கும் சிவப்பு கொடிகளும் பொதுவுடைமை கருத்துக்கள் நிறைந்த பதாகைகளும் நிறைந்திருந்தன.பகல் முழுதும் விளையாட்டுப்போட்டிகளும் மாலை 6 மணியளவில் சிறிய தெருமுனை கூட்டமும் நடப்பதாக ஏற்பாடாகி இருந்தது.

ராஜ்குமார் சித்தப்பாதான் ஏற்பாட்டாளர்,மிகப் பெரிய கம்யுனிச வாதி என்று எங்கள் ஊரில் அறியப்பட்டவர்.அவர் தலைமுறையில் ஓரளவு படித்தவர்,உள்ளூர் விவசாய அணியின் தலைவர்,ஓரளவு வசதியானவர்,இருந்தாலும் எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் கட்சிக்காக உண்டியல் ஏந்துவார்.நிறையப் புத்தகங்கள் சேமித்து வைத்திருப்பதால் என் விடுமுறை காலங்களின் பெரும்பகுதியை அவரது வீட்டேலேயே கழிப்பேன்,கார்ல் மார்க்ஸ்,சேகுவேரா, மரக்ஸ்சிம் பற்றி அதிகம் கூறுவார்.கார்த்திகை மாதம் தவறாமல் மாலை போடுவார்,கேட்டால் தோழர் ஜீவா முருக பக்தர் என சமன் செய்துவிடுவார்.

அன்று இரவு நடந்த கூட்டத்தின் வரவேற்புரையை வழங்க எனக்கு வாய்ப்பளித்தார், சேகுவேராவைப் போல கர்ஜிப்பதாக நினைத்துக்கொண்டு கத்தியதாக பிறிதொருமுறை எனது நண்பன் கூறினான்,மேடையின் கிழ் அப்பா என்னை முறைத்தபடி நின்று கொண்டிருந்தார் "வீட்டுக்கு வா வச்சிக்கிறேன்" என்பது போல் இருந்தது அவர் பார்வை இருந்தது.மேடையில் பேசும் போது கிழ் இருப்பவர்களை முட்டாள் எனக் கருது என யாரோ சொல்லியதாக சித்தப்பா சொல்லியிருக்கிறார்.

எனக்குப் பிறகு எல்லோரும் பேச பின் எழுந்த சித்தப்பா உள்ளூர் அரசியல்,உலக அரசியல்,ரஷ்யப் புரட்சி,ஆண்டான் அடிமை என ஒன்று விடாமல் பேசி முடித்தபோது மேடைக்கு கீழே 20 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர் அதில் 10 பேர் கட்சி தோழர்கள்.

கூட்டம் முடிய சரியாக 11 மணிக்குமேல் ஆகிவிட எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு வர சரியாக 12 மணி,அதுவரை சித்தப்பா வீட்டு வாசலில் சிங்கு காத்துக்கொண்டிருந்தான்,சிங்கு சித்தப்பாவின் வயல்களுக்கு காரியம்பார்ப்பவன்,"நேரமயிருச்சாப்பா"
சித்தப்பா வினவிய போது "இல்லைங்க நானும் இப்பதான் வந்தேன்" என்று கூறிய படியே எழுந்து
நின்றான் சிங்கு,"இன்னிக்கு நடவுக்கு எத்தனை ஆளப்பா?" "20 பேருங்க நாடார் கடைக்கு மட்டும் 70
ரூவா கொடுக்கனுங்க" என்று பதிலளித்தபோது திண்ணைத் திண்டில் தோள் துண்டை உதறியபடி
சாய்ந்து கொண்டார் சித்தப்பா,திண்ணையின் சாளரத்தில் வரிசையாக தலைவர்கள் படம் மாட்டப்பட்டிருக்கும்,அதில் கார்ல் மார்க்ஸ் எப்போதும் முறைத்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றும் எனக்கு.
"பாக்கியம் அவனுக்கு சோறு போட்டியா?" என்று கேட்டபடி கணக்கு நோட்டை
கையில் எடுத்து புரட்டினார் சித்தப்பா.தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து வந்து
"இலை கொண்டு வந்தியா சிங்கு" எனக் கேட்க பின்பு தேக்க இலைகளை ஒன்றாக இணைத்து
கூம்பாக செய்து கொண்டு வந்தான் சிங்கு.
"ஏப்பு போண்டா என்ன புதுசா இருக்கு கணக்குல?" என சித்தப்பா கேட்க "இன்னைக்கு மே 1 இல்லைங்களா" எனக் கூறியபடி தலையை கவிழ்த்தான் சிங்கு.
"மே 1 ன்னுன்னா சம்பளம் தரோமா இல்லையா? இந்தப் பழக்கம் அவதுங்கறேன்"
"இல்லைங்க ..........."
சிங்கு ஆரம்பிக்கும் முன்பே "யாருகிட்ட கேட்ட?" என சிடுத்தார் சித்தப்பா
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது சற்று முன்னர் ரஷ்யப் புரட்சியில் புர்ஷ்வாக்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராடியதை சித்தப்பா பேசியது எனக்கு நினைவில் வந்து போனது,அதற்குள் சாப்பாடு வாங்கி மடித்து கொண்டு கிளம்பத் தயாராகி விட்டான் சிங்கு.
"சத்தி நீ சாப்டுப்பா" என்று கூறிய போது "இல்லப்பா நான் விட்ல சாப்டுக்கிறேன் "
என்று கூறியபடி கிளம்பியபோது "ஏலே இரு இந்தா தாய் காவியம் புத்தகம் கேட்டியல்ல நேத்து" என்றார்.
"இல்லப்பா நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்" என்று வேகமாக வெளியேறியபோது புகைப்படத்தில் இருந்து கார்ல் மார்க்ஸ் எனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அரிவாள்-சுத்தியல்

Monday, February 22, 2010

கடந்து வந்தப் பாதை


காணல் நீர்
நிறைந்தது-என்
தேசம்-அதில்
கந்தகக் காற்று
மட்டுமே என்
சுவாசம்!

கோர நாகங்களின்
பிறப்பிடம்-எம்
பாதை!

செல்லும் வழி
மறைக்கும் இருட்டு
நிறைந்தது என்
சாலை!

தூரோகங்களின்
வழிப்பறிகளை
தாண்டிச் செல்கையில்;
தோல்விகளின்
இடியிறக்கம் எம்
தலையில் விழும்!

கள்ளிகள்
மட்டுமே
கருத்தரிக்கும்-என்
தேசத்தில் மகரந்த
வாடை இல்லை!

என்
வெற்றிக்கான வேள்வியின்
போதேல்லாம்
கந்தகச் சுறாவளி
துயிலெழுந்து பெருமுச்சு விடும்!

தீ
அணைந்தாலும்
கங்குகள் நீர்துப்போவதில்லை!

அரிவாள்-சுத்தியல்

Sunday, February 21, 2010

ஒரு மெழுகுவர்த்தியின் தற்கொலை(சுனாமியின் போது எழுதப்பட்ட கவிதை)


ஆழி சுழ்
நாழி அறியா வன்னம்-உயிர்
போகும் நாள்
தெரியாது செய்து-அவர் தம்
யாக்கை தன்னை-நின் நீர்
நாக்கை கொண்டு
உள்வாங்கி
உயிர் உறிஞ்சி-நீ
துப்பிய
சடலச் சளிகள் எத்துனை? எத்துனை?

நின்
நடு கொண்ட்டேழுப்பிய
வெப்பம் தனிக்க-புவி
வாழ் உயிர் கொண்டனைத்தது
முறையோ?சரியோ?

போதும்!போதும்!

உன்னை கடல்அன்னை
என்றழைக்க
"நா"மறுக்கிறது!

கொடுத்த முத்துக்களின்
எண்ணிக்கையை உயிர்கொண்டோப்பிட்டு
திரும்பப் பெறுவாய்-என்றறிந்திருந்தால்
முத்துக்களை-உன்
முகத்தில் விசியிருப்போம்!

நீ அளித்த
புலாலை-ருசித்த
"நா" வை-செரித்த
இரைப்பையை கிழிப்பாய்
என அறிந்திருந்தால்-அதனை
திரும்பத்
துப்பியிருப்போம்!

மானுடம் செய்தவறு
பொறுக்க முடியா
அவர் வாழ்
நிலவுலகில்
நீலச்சாயம் பூச முற்ப்பட்டயோ?

மன்னிக்கத் முடியாத
நீ
அன்னை அன்று
அரக்கனே!

நீ
என் மேலேறியும்-சுடர்க்
கொண்டாய் அளவாய் இருந்தால்-உன்னை
எரித்துப் போசுக்கியிருப்பேன்!

எடுத்துக் கூற-இம்
முட்டாளுக்கு
ஆளில்லை!

ஓடி வந்து நானுனை
நோக்கிய நொடி
உண்மையரிந்தேன்!

என்
எண்ணங்கள் பொய்த்ததனால்-நான்
என்னையே எரித்துக்கொள்கிறேன்!

என்னை
உர்க்கியழும் ஒளி
இறந்தவர் ஆன்மாக்களுக்கு
அமைதி தரட்டும்!

பரவும் மஞ்சள்
கதிர்-முன்
படர்ந்த இருளை-தூர
விரட்டடும்!

ஒழுகு-என்
உடல் கண்டு-அவர் தம்
பிரிந்தவர் உற்றார்கள்
அமைதி பெறட்டும்!

உன்னை
பொசுக்க துடித்து
எரிந்து கருகும்-என்
நா-நீ
சாம்பலாக சபிக்கட்டும்!

நீ
சாம்பலாக சபிக்கட்டும்!

அரிவாள்-சுத்தியல்

மொனத் தவம்


பொற் சிலை
கொம்பு உடையாள்!

சின்ன மின்மினிப்
பல் உடையாள்!

மொழி கொண்ட
விழியுடையாள்!

கவி தூண்டும்
இதழுடையாள்!

மயிற் கழுத்து
இடையுடையாள்!

உன் மயிர் இடுக்கு
தேசமெல்லாம்
மகிழம் பூ வாசமடி!

உயிர் பிரியும்
நொடியினிலும் உன்
மடியே தேசமடி!

உம்
பிறை நடனப் பின்னழகில்
பேதை மணம்
வேதும்புதடி!

முகில் மறைக்கும்
வெண்ணிலவாய் முன்னழகு
கொல்லுதடி!

இவ்விரண்டும்
ஒருங்கிணைந்தே என்
மொனத் தவம் கலைத்ததடி!
அரிவாள்-சுத்தியல்

செங்கொடி ஏந்திடுக


தடைகள்
பலவே வந்தாலும்
தாண்டி ஓடும்
வெள்ளம் போல்;

படைகள்
வகுத்து நின்றாலும்
பாய்ந்து செல்லும் கூர்வாளாய்!!!

மடமை கொளுத்து
நீயும் நின்றே
வெப்பம் கக்கும்
எரிமலையாய்!!!

கஞ்சித் தலைவர்
வழிவந்த-கொள்கையாளர்
போனார் பிசுபிசுத்து!!

ஈரோடு தந்த கருத்தெல்லாம்
இன்று மழையில்
விழ்ந்த கரித்துண்டாய்!

மடமை கண்டு
பொங்கிஎழு!
மாணம் காத்திட
அணிவகுத்து-ஏந்து
நீயும் செங்கோடியே!!!!
மறிக்கா தத்துவம்
மர்க்சுடையது மறிப்போமாயினும்
கொள்கை விடோம்!


அரிவாள்-சுத்தியல்

காதல்


உனை
பார்க்க
மணம் ஆவல் கொள்ளும்!

உன்
ஸ்பரிசம் என்
ஜீவன் வெல்லும்!

உன்
விழிகள் என்
உயிரைக் கொல்லும்!

நீ
இசைந்தால் என்
பிறவி முற்றும்!!!

அரிவாள்-சுத்தியல்

செங்கொடி ஏந்திடுக


நீ
சிந்தும் வேர்வையினால்
முதலாளிகள் செம்மையாய்
கொழுத்தது போதும்!

வஞ்சகம் செய்தே உனை
அவ் வஞ்சகர் கூட்டம்
நித்தம் வளர்ந்ததடா!

உன்
இரத்தம் பிழிந்துறிஞ்சி
அவர் மொத்தம்
விழுங்கிடுவர்-உன் உரிமை
மறுத்திடுவர்!

உரிமை காத்திடவே
உணர்வினை கிளர்தேழச்செய்!

மடமைப் போக்கிடவே
கரத்தில் செங்கொடி
எந்திடுக!

பரிதி நீயும்
இனி பாரில்
செங்கதிர் பாய்ச்சிடுவாய்!

விடிவு தேடிவரும்-உன்
வாயிலை நோக்கி
நாளை!

அரிவாள்-சுத்தியல்

தோல்வி

என் நெஞ்சு நிறைய
நம்பிக்கை சுமக்கிறேன்!

வாழ் பயண
வழிச் செலவுக்கு
அனுபவம் சேமிக்கிறேன்!

இடர் செய்யும்
கற்களையெல்லாம் ஏணிப்படிகளாய்
மாற்றியபடி!

என் காலிடுக்கில்
வழியும் உதிரத்துளிகளை
என் வேர்வையால்
கழுவிக் கொள்கிறேன்!

இத் தளிர்
இதுவரைப் பூக்களை
சுமந்ததே இல்லை!

சாம்பலின்
நிறமறிந்த அளவு
சாமந்தியின் வாசம்
தெரியாது!

பினம் தின்னும்
கழுகுகள் நிறைந்த
விதியில் என் மன
ஊர்வலம் போகிறது!

இந்தகல் தானாய்
உருண்டு-உருண்டே
சிற்பமாகிறது!

சேதாரங்கள் தான்
என்னை செதுக்குகின்றன
வாழ்க்கையிலும்!
அரிவாள்-சுத்தியல்

கனவு


என்
அந்தபுறச் சோலையிலே
அயர்ந்து
நான் படுத்திருந்தேன் !

கண்ணயர்ந்த
வேளையிலே
கட்டழகுப் பெண்ணொருத்தி-எனை
கட்டிலோடு
அள்ளிக்கொண்டாள்!

கட்டி எனைத் தந்த
முத்தங்கள் எல்லாம்
வெட்டி பரிசளித்த
பொன் கட்டிகள்!

சுட்டு விரலசைவில்
சொர்க்கம் திறந்தாள்!
பட்டு அவள் தம்
மேனியழகு அதில்
பஞ்சம் இல்லை!

செந்தாழம் பூவான
செவ்விதழில்-கலசக்
கள் வண்டானேன்!

அங்கக்

குறிப்பெடுத்தேன்
தங்கம் அவள்மேனி!
இடமில்லை

இனிமேலும்!

மோகம்

முற்றியதால்-அவள்
முகம் காண

மறந்துவிட்டேன்!

விழித்து நான்
பார்த்தபோது

சிறகடித்து
பறந்திருந்தாள்!

சிறகால் அவள் செய்தகாயம்
சிக்கிரம் ஆறிடுமோ?
வருவாள் என்று
நானும்-என்
வாசலில் பூத்து கிடவேன்!

அரிவாள்-சுத்தியல்

புண்ணியமாப்போகும்


ஏகாதிபத்தியம்!


முந்தய ஆட்சியரின் ஊழல்!


சென்செக்ஸ்!


பண வீக்கம்!


பணப் புழக்கம்!


பசுமைப் புரட்சி!


ஐந்தாண்டுத்திட்டம்!


"அதெல்லாம் இருக்கட்டும் சாமி உங்க கட்சி ஆளுங்க நேத்து கட்சி நிதின்னு


சொல்லி என்னோட கோவண சுருக்கில் இருந்து முனு ரூவா உருவிட்டாங்க


அத திரும்ப கொடுக்க சொன்னிங்கனா டி குடிப்பேன் சாமி சொல்விங்களா


புண்ணியமாப்போகும்!!!


அரிவாள்-சுத்தியல்

மறித்துப் போ இல்லையேல் மானத்தோடிரு


மானம்
மறித்த-இனத்தை
உசுப்
மயிர்கூட
உதிர்க்கத் தயங்கும்
தமிழினத்தில்-உயிரில்
வளர்த்து
உசுப்பினான்-என்
ோழன்.

என்ன செய்ய
அறிக்கை விடவும்
அஞ்சலி செலுத்தவுமே
பயன்படுகிறாய் எந்தன்
தமிழ் "சே"!

விழிக்க மறந்தாய்
தமிழா-இன்று
இமையே தீயும் -நிலை
மறித்துப் போ-இல்லையேல்
மானத்தோடிரு!!



அரிவாள்-சுத்தியல்

தூக்கிலிடுவோம் துற்றுவோரை




தேடித் தேடிச்
சோறு தின்று-சோறு கிட்டா
வேளைகளில் கழிவுகள்
தேடும் பன்றிக் கூட்டமா
நம் இனம்!

உரிமைக் கேட்டுப்
போராடினால்
உயிர் குடிக்க துடிக்கின்றன
புத்தனின் பிசாசுகள்!

அதோ உங்கள்
புத்தனின் பல்லிடுக்கில்
தொங்கும்-என் தங்கையின்
சுண்டு விரலை அகற்றிவிட்டு வந்து
எங்களிடம் சமாதனம் பேசுங்கள்!

"உயிர் அரிதே-ஆனால்
மானத்தை விடவல்ல"
என்ற ஈழவனின்
வார்த்தைக் கேற்ப
எங்கள்
தல்லைகளும்
தங்கைகளும்
கண்ணெதிரே
கற்பழிக்கப்படும் போது
வயிற்றில்
குண்டு கட்டுவதை
தவிர
எங்களுக்கு
வேறு வழில்லை!


இனியேனும்
மாற்று மொழி
மோகமும்
வேற்று மொழியர்
பகைமையும்
ேரறுப்போம்!

தூற்று தமிழ்
தூரோகம் கண்டால்
தூக்கிலிடுவோம் சாகும் வரை
தூற்றுவோரை!


அரிவாள்-சுத்தியல்