
கலைந்திடு
என் குழந்தாய்
கருவில் இருந்து
கலைந்திடு என்
குழந்தாய்.
வன்னியில்
சிங்களவனால்
புனரப்பட்ட உன்
பெரியக்காள்
சொல்லிவிட்டாள்
"இனியொரு பெண்
பிறந்தால் அது
ஈழத்திலே
இருக்க வேண்டுமென்றே"
அன்றே.
உன்
பாலினம் நானறியேன்
ஆயினும்-நீ
கலைந்திடு செல்லமே.
பெண்ணாய்
நீ பிறந்தால்
கலவரத்தில் புணரப்படுவாய்.
ஆணாய்
பிறந்துவிட்டால்
புலியா என்று சோதிக்க
நிர்வாண
உடை அணிவாய்.
கம்பிகளுக்குள்
அடைபட்டே
காலம் கழியனுமா?
வேண்டாமேன்
தங்கமே-கலைந்திடு
நீயேன்
கருவிலே.
நமது
ஈனம் அழித்திட
தலைவனிருந்தான்.
அவன்
ஈழத்தாகம்
அழித்திட
கொத்தளமிட்டார்.
தமிழச்சிகள்
மானம் காற்றில்
பறக்க-உயிரில்லா
கண்ணகி சிலை
காட்டி தேர்தல்
முழக்கமிட்டார்.
ஷெல் அடித்து
ஷெல் அடித்தே
நம் இனம்
செல்லரித்துப்
போனதடா.
ஈழம் கிடைப்பது
பிறகேனினும்-நம்
ஈனம் துடைத்திட
யாருமில்லை
இப்போது-ஆதலால்
கலைந்திடேன்
கருவிலே-என்
முகமறியா
ஆம்பலே.
சுரக்குமென்
தாய்பாலை-என்
இறப்புக்குப் பிறகு
உனக்களிப்பேன்-அதுவரை
நீயேன்
கருவிலிருந்து
அழிந்துப்
பொறுத்திருப்பாய்.
போ என் தங்கமே.
நானும் வருவேன் பின்னமே.
No comments:
Post a Comment