எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, March 18, 2010

பேறு


உறவில்லாத
தனிமை.

உன்னிடத்தில்
மறுக்கபட்ட-எனது
உரிமை.

சாவிற்கு
பின் வரும்
அமைதி.

இறந்து
பிரசுவித்த
சிசு.

சுடுகாட்டு
சாம்பல்.

சித்திரைச்
சூரியன்.

நித்திரை
பொசுக்கும்
நிலா.

அடியில்லாத
செருப்பு.

விடிவில்லாத
இரவு.

உதடு
வெடித்த
புன்செய்.

குருதி
வழிந்த
புத்தன் சிலை.

முள்ளோடிந்த
கடிகாரம்.

முடிவில்லாத
வாழ்க்கை.

எனக்கு கிடைத்தவைகள்.

Friday, March 12, 2010

ஓர் ஈழத் தாயின் வழியனுப்பல்


கலைந்திடு
என் குழந்தாய்
கருவில் இருந்து
கலைந்திடு என்
குழந்தாய்.

வன்னியில்
சிங்களவனால்
புனரப்பட்ட உன்
பெரியக்காள்
சொல்லிவிட்டாள்
"இனியொரு பெண்
பிறந்தால் அது
ஈழத்திலே
இருக்க வேண்டுமென்றே"
அன்றே.

உன்
பாலினம் நானறியேன்
ஆயினும்-நீ
கலைந்திடு செல்லமே.

பெண்ணாய்
நீ பிறந்தால்
கலவரத்தில் புணரப்படுவாய்.
ஆணாய்
பிறந்துவிட்டால்
புலியா என்று சோதிக்க
நிர்வாண
உடை அணிவாய்.

கம்பிகளுக்குள்
அடைபட்டே
காலம் கழியனுமா?
வேண்டாமேன்
தங்கமே-கலைந்திடு
நீயேன்
கருவிலே.

நமது
ஈனம் அழித்திட
தலைவனிருந்தான்.
அவன்
ஈழத்தாகம்
அழித்திட
கொத்தளமிட்டார்.

தமிழச்சிகள்
மானம் காற்றில்
பறக்க-உயிரில்லா
கண்ணகி சிலை
காட்டி தேர்தல்
முழக்கமிட்டார்.

ஷெல் அடித்து
ஷெல் அடித்தே
நம் இனம்
செல்லரித்துப்
போனதடா.

ஈழம் கிடைப்பது
பிறகேனினும்-நம்
ஈனம் துடைத்திட
யாருமில்லை
இப்போது-ஆதலால்
கலைந்திடேன்
கருவிலே-என்
முகமறியா
ஆம்பலே.

சுரக்குமென்
தாய்பாலை-என்
இறப்புக்குப் பிறகு
உனக்களிப்பேன்-அதுவரை
நீயேன்
கருவிலிருந்து
அழிந்துப்
பொறுத்திருப்பாய்.

போ என் தங்கமே.
நானும் வருவேன் பின்னமே.

Thursday, March 11, 2010

நான் கள்ளிகளின் காதலன்


நான்
கடந்து செல்லும்
பாதைகளில்
கற்பூர முல்லைகளே
இருந்தாலும்
கள்ளிகளுக்காய்
மட்டுமே அனுமாநிக்கப்பட்டவன்
நான்.

எனக்காக
எப்போதோ
எங்கேயோ
ஏதோ
ஓர் தேவதை
வீசி எறிந்த
மலர் கூட
எனை வந்து
தொடுகையில்
சருகாகவே எனை
ஸ்பரிசித்தது.

அப்போதுதான்
உணர்ந்தேன்
நான்
"கள்ளிகளின் காதலன்"
என்று."

உறுதியேற்போம்


பேதமெல்லாம்
கடந்து
நண்பராய்
இணைவோம்-நாம்
மனிதநேயமுள்ள
மாந்தராய்
மலர்வோம்.

சாதி மதம்
அடித்து நொறுக்க
சாட்டை சுழற்றுவோம்
வர்க்க பேதம்
மண்ணில் புதைக்க
கொடு வாளேந்துவோம்
சமதர்ம
சமத்துவம் செய்திட
புதுத் தளம்
செய்துவோம்-நாம்
களம் காணுவோம்

நாகரிக
வார்த்தைகளால்-சமூகக்
கோபம் பதிவு செய்.

உன்
அழகு தமிழ்
கவிதைகளால்-அரங்கம்
அழகு செய்.

சுவை
மிகு நகைத்
திறனை-சுவைக்க
மற்றவர்க்குக்
கொடு.

பார்
மாந்தர்
மடமை நீக்க
பகுத்தறிவுப்
பாதை எடு.
நீ
மடமைக்கோர்
பாடை எடு.

பொதுவுடைமை
சமதர்மம்
இதுவே நம்
பாதையாகும்
அதை
அமைப்பதற்கும்.
அதற்காய்
உழைப்பதற்கும்
இதுவே காலமாகும்.

Monday, March 8, 2010

பதில்


முல்லை
அவள்-எம்
இதயத்தில்
தைத்த
முள்ளை-இதுவரைக்கும்
நான்
அகற்ற
எத்தனிக்கவே
இல்லை.

விலக்க
என்
முளை
முயற்சிக்கவும்
இல்லை-அவள்
எனை விட்டு
பிரிகையில்
சொன்ன
சொல்லை.

இரவலாகவாவது
கொடு உன்
இதயத்தை
என்று நான்
யாசித்தபோது
அவளது பதில்
இதுவரைக்கும்.
"இல்லை".

Sunday, March 7, 2010

இதுபோதும் எனக்கு.


என்
தோள் சரிந்தநிலையில்
நீ.

கழுத்திறுக்க
கொடுத்த
முத்தம்.

தெளிக்கும்
பச்சையில்
வெளி நிறைந்த
புல்.

கையில்
குறையாத
மதுக்கின்னம்.

மதுக்குடுவை
நீ.
மதுவாய்
காதல்.
அதில் கரையும்
பனிக் கடிகளாய்
நான்.
வழிய வழியக்
அன்பு.

இதுபோதும்
உயிர்பிரிய
எனக்கு.

Friday, March 5, 2010

பிரிவாற்றாமை


நீ
பிஞ்சு மொழி
மஞ்சள்
கிள்ளை.

சிறகுகளை
சிதறவிட்ட
சுடிதார்
தேவதை.

ஊடல்.
கூடல்
கூட்டும்.

சிரபுஞ்சியில்
நின்று கொண்டே
சகாரா
உஷ்ணம்
உணர்த்தும் உன்
பிரிவாற்றாமை.

நகம் வெட்ட
மட்டுமே
கத்தியெடுக்கும் நான்
இப்போதேல்லாம்
நெஞ்சு கிழித்து
காட்டலாமா உன்னிடம்
என்றோசிக்கும்
அனுமனாகிவிட்டேன்.

நீ
பேசாத நாட்களில்
காற்று குடிக்கும்
தாவரமாகிப்
போனேன் நான்.

பிற
உயிரினங்கள்
சுவாசிப்பிற்க்காய்
ஆக்சிஜன்
மிச்சம் வைக்கச்சொல்லி
அழுகின்றன
என்னிடம்.

கேட்கவில்லையா
உனக்கு?

கூவி விடு
குயிலே-என்
அழைபேசி-உன்
அழைப்பிற்காய்
ஏங்கி நிற்கிறது.

Thursday, March 4, 2010

நான் அன்பு தொலைத்தவன்


மணிக்கணக்கில்
நான் பேசிய
வார்த்தைகளை
மவுனத்தில்
கரைத்திட்ட
கணப் பொழுதுகள்.

மேடு பள்ளங்களை
எதிர்பார்த்த-உன்
இதழால் மட்டுமே
நிரப்ப முடிந்த

பள்ளங்கள் ஏற்படுத்திய
உன்
இருசக்கர வாகனப்
பயண உரசல்.

உன் இதழ்
வெப்பம்
கைப் பேசியின்
வழியே என்
செவி உணர்ந்த
மணிப் பொழுதுகள்.

இருவருமே
கல்லூரி தவிர்த்து
காதல் பழகிய
அந்த நாட்கள்.

அந்த
ஒரு இரவில்
நம் அன்பின்
தேடலுக்கு பின்
என் வேற்று மார்பில்
கலைந்த
கூந்தலோடு-உன்
இதழ் தொடுத்த
கோலத்தில் வழிந்த
எச்சில்
பிசுபிசுப்பு.

தூக்கமில்லாத
கண்களோடு
அடுத்த நாள்
கல்லூரியின்
உணவு இடைவேளையில்
அன்போழுகிய அந்த
அசதிப் புன்னகை.

ஏதோ
ஒரு மாலைப்பொழுதில்
உன் தகப்பனோடு
என் வீட்டு
வரவேற்ப்பறையில்-நீ
கொடுத்த
என் தந்தையின்
வருகையை எதிர்பார்க்கும்
உன் திருமண அழைப்பிதல்.

புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்(கட்டுரை)


சுவாமி என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகளை தமிழக அரசின் ஆதரவுத் தொலைகாட்சி ஒவ்வொரு தமிழனின் வீட்டு கூடத்திலும் ஒளிபரப்புசெய்து மீண்டும் ஒரு முறை தனது ஏற்றப்புள்ளிகளை உயர்த்த முயற்சி செய்துள்ளது. 33 வயதே நிரம்பிய ஓர் இளைஞனை இதுவரை கடவுளின் கேட் பாசுடன் வந்த ஓர் தூதுவனாக நினைத்த இந்து மக்கள் கட்சி போன்ற காவிவேடதாரிகள் தற்போது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நித்யானந்தாவின் சொத்துக்களை நாசப்படுத முயற்சித்திருக்கிறார்கள். ஒருவேளை அந்த காவிவேடதாரிகளுக்கு நடிகையை நித்யானந்தா தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருந்தால் இந்த கலயோபரங்கள் நடந்திருக்காது. முதலில் சாமியார்களை ஒழுக்க சீலர்கள் என்று கருதுவதும்,ஒரு மானிடன் தனது எல்லாஉணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்ற அவனது சுயம் சார்ந்த முடிவினை ஒருசமுகம் முடிவெடுப்பது சரியா என்பது முதல் கேள்வி. எந்த ஒரு சாமியாருக்கும்,பாதிரியார்க்கும்,ஊலாமாக்களுக்கும்,கன்னிகாஸ்திரிகளுக்கும் விந்தணு வெளிப்பாடோ,மாதவிடாய் காலங்களோ எர்ப்படாமலிருக்கும் என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒரு ஆண் தனது கலவிப் பொழுதுகளில் விந்து வெளிப்பாட்டின் போது உச்சம் அடைகிறான் என்பது நிதர்சனம்.அதே நிதர்சனம் ஒரு சாமியாருக்கும் குறைந்த கால இடைவேளிகலான சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒருமுறையாவது நிகழ்வது இயல்பு.அப்படி இருக்க அவரை ப்ரம்ச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துவது தவறு.அது அவரின் சுய சிந்தனைக்கு உட்பட்ட முடிவு. மேலும் அந்த நடிகையின் முழு சம்மததினுடனே அவர் உறவு கொள்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.ஒரு பெண் அவளது விருப்பமான ஆணின் அவனது சம்மதம் இருக்கும் பட்சத்தில் அவனுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.இப்போது வீதிக்கு வந்து போராடும் பண்பாடு காப்பாளர்கள் அந்த நடிகை நடித்த குளியல் காட்சிகளையோ, குத்து பாட்டுக்களையோ பார்த்திருக்க மாட்டார்கள் என அந்த இயக்கம் சார்ந்த தலைவர்கள் விளக்கம் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். மேலும் பெரும்பான்மை மக்கள் மதிக்கும் இடங்களான இதற்க்கு முன்னாள் நிகழ்ந்த கருவறை கலவி போன்று கருவறை தளங்களை பயன்படுத்தாமல் தனியறையில் உறவுகொண்டமைக்காக நித்யானந்தா பாராட்டப்பட வேண்டியவராகிறார். இதில் தவறு நமது சமூகத்தையே சார்ந்தது,கடவுளின் பிரதிநிதி என்று நம்மில் இருந்தே ஒருவன் கூறும்போது அதனைஏற்று அவனை வழிபடத் தொடங்கியபிறகு,சக மனிதர்களுக்கு தோன்றும் உணர்சிகளை அவன் வெளிக் கொணரும்போது சமுக மனிதர்களின் மனம் அதனை ஏற்க மறுக்கிறது, இதில் கண்டிக்கப்படவேண்டியவர்கள் ஊடகத்தார். எத்தனையோ சமுகம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க சாமியார் அவரது அறையில் பஜனை செய்கிறாரா அல்லது மாத்திரை விழுங்கி காலித்தனம் செய்கிறாரா என வேவு பார்க்கும் திறமையை பிறசமுகம் சார்ந்த நிகழ்வுகளில் காட்டலாம். நமது மக்களுக்கு கடவுள் உண்டா,அவ்வாறு இருந்தால் அந்த நபருக்கு ஏஜெண்டுகள் உண்ட என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த நிகழ்வு நமக்கெல்லாம் எடுத்து இயம்புகிறதே ஒழிய வேறு எந்த ஒரு பேரழிவும் இந்த நிகழ்வால் ஏற்படப்போவதில்லை. பெரியார்,மார்க்ஸ்போன்ற தலைவர்கள் சொன்ன கருத்துக்களை மக்களிடம் சொல்லி புரிதலை ஏற்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்ததர்க்க்காகவும் நித்யனந்தாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிரிக்கிறோம்.இது புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணம்.

அரிவாள்-சுத்தியல்

Tuesday, March 2, 2010

மறுவாழ்வு


விழிக் குளம்
தளும்ப
விதி நொந்த
நங்கள் - பணமுடி
கொடுத்த - படகு
பாதியில்
இறக்கி விட
கடற்படை கைது செய்து
கரைசேர்ந்தபோது
கையிருப்பு சில்லறைகளையும்
அலுவலர் கூட்டம்
பறித்து கொண்டு - எமை
முகாம் நோக்கி
இட்டு சென்றபோது -எம்மை
கடந்துசென்றது
ஈழத் தமிழர் மறுவாழ்வு பேரணி ???

நிழல் கூடு


மனிகொருமுறை கூடும்
கடிகரமுல்லாய்-நாணம்!
நொடிக்கொருமுறை அணைத்தேன்
உன்னை என் நினைவால்!

கனிசுவை மலர்
உந்தன் இதழ் - அதில்படர்
பனி ஈரம்
எந்தன் மனம்!

நாணல் இமையை
கண்ட நாளாய் - என் மணம்
காணல் நீரை
கக்குதடி விரசத்தால்!

இதழோடு
இதழ் சேர்த்து
உயிர்
பிரிக்ககற்றுக்கொடு!

உன்
உயிரோடு
எனைக்கோர்த்து
உறவாட
சொல்லிகொடு-இல்லையேல்
உன் நிழலோடு
எனைப் புதைத்து
உறங்கச் சொல்லி
ஆணை இடு!

தீவிரவாதம்


தகர்கத்தான்
செல்கிறோம்
நாங்கள்.
சிங்களப் பேரினவாதத்தை.

என்னுடன்
சேர்ந்து
என் கற்பழிக்கப்பட்ட
தங்கையின்
காதலனும் வருகிறான்.

விடை தேடி


எங்கோ
விழுந்த மழைத்துளி
என் உயிர்
நனைத்தது
ஏன்?

எங்கோ
உறைந்த
பனிக்கட்டியால்
என்இதயம்
உறைந்தது ஏன்?

நீல வானிலிருந்து
சிந்தும்
நீர் துளிகள்
சேமித்து-மீண்டும்
வானுக்கே வழியனுப்ப
முயற்சிக்கேறேன்!

உலகம்
என்னை
மட்டும்
வேறுபடுத்திப்
பார்க்கிறதா-இல்லை
நான் வேறுபடிருக்கேறேனா?

இது
உன் விழியால்
வந்த வினை-உன்
விழிகளில்
மட்டுமே
விடையும்!

அரிவாள்-சுத்தியல்

எழுவாய் தமிழா.........


தமிழே
உயிர்(ரே)-அதன்
பகையே-நீ
பனியாய்
மறைவாய்
உடனே.

மறையாப்
பகையை
அறுப்போம்
உடனே அடியோட(டு)
அறவே!

தமிழா
உடனே
வருவாய்
கையில்
கொலைவாளுடனே!

சிரமாய்;
கருவாய்;
கற்பாய்-காப்போம்
உயர் மேவிய
தமிழை!
அரிவாள்-சுத்தியல்

காதலே எழுந்துவா கல்லறை வாசம் போதும்


ஏனடி
இதழ்களுக்கிடையே
சுவர் எழுப்புகிறாய்?

இன்னுமொரு
உத்தபுரம்
தேவையா?

செம்படை
வரும்முன்
சுவர் நீக்கு.

வா
ஓர்எச்சில்
இலக்கியம்
எழுதுவோம்
நாம்!


உச்சத்திலும் ஏனடி
மிச்சம்
வைக்கிறாய்?

முன்னொருமுறை
இருள்
கவிழ்ந்த
கலவிப்
பொழுதுகளில் நீ
வரைந்த நகக்கிறல்
ஓவியம்
தழும்புகளாய்.

அதனைப்புதுப்பிக்கப்
புதுப் பட்டறை
அமைப்போம்
சட்டென வா!


அரிவாள்-சுத்தியல்