எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, February 25, 2010

என் செண்பகப் பூ


மஞ்சள் நதி
மல்லிகையே!

கற்ற என் மொழிகளெல்லாம்
உனைப் பாடியே
வற்றியதால்-என்
வெக்கையை தணித்திடவே
கவரியாய் நின் ஈரக்கூந்தல்
அனுப்பிடுவாய்!

மொட்டுகள் மலரத் துடிக்கும்
அதிகாலை வேளையில்
சிட்டு நீ வாசலிலமர்ந்து
கோலமிடும் அழகை
எட்டி நின்று பார்பதற்கு
எத்துனை ஜென்மம் வேண்டும்?

ஓரப் பார்வையிலே
உயிர் குடிக்கும் பெண்ணே-உந்தன்
துர நிழல் கண்டாலே
என் இதயம் தரையில் விழும்!

ஒற்றை முடிகோரும்
ஓரிரண்டு விரல்களையே-நானும்
பாடி நாவறண்டுப் போனதினால்
சற்றே திரும்பி நியும்
சல்லடை பார்வை வீசு-என்
சாவும் மோட்சமாகும்!

உன்
வெண்ணிலவு முகத்தில்
ஈரக்கைகளோடு இரவு
தெளித்த முத்துக்களா உன்
முகப்பருக்கள்?

உன்
காதோரப் பல்லக்குகளில்
இடமிருந்தால் என்னை
ஏற்றிக்கொள்.

உன் கன்னங்களோடு
உரசுவதேன்றால் திராவகம்
விழுங்கவும் தயாராய் இருக்கிறேன்!

காலைக் குளியல் முடித்து-நீ
தலை துவட்டும் போதேல்லாம்-என்
இதய வீதிகளெங்கும்
இனிமையான சாரல் காற்று!

கள்ளிகள் மட்டுமே தரிக்கும் -என்
கர்ப்பப்பையில்-நீ
இன்று செண்பகப் பூவாய்!

பன்னீர் வேண்டாம்
கண்ணீர் தெளி!
சந்தணம் வேண்டாம்
சாம்பலாவது துவு!

இப் பாலைவனம்
ஈரம் படர காத்திருக்கும்.

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment